Categories
மாநில செய்திகள்

“நானும் 12th பெயில் தான்”….. இதோடு வாழ்க்கை முடியல்ல….. மாணவர்களுக்கு தெம்பூட்டிய ஆர்.ஜெ.பாலாஜி…..!!!

மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தொகுப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவராக கலக்கி வருகிறார் ஆர் ஜே பாலாஜி. முதன்முறையாக இவர் நகைச்சுவை நடிகராக பயணத்தை தொடங்கினார். தற்போது படிப்படியாக முன்னேறி இயக்குனராக வெற்றி கண்டுள்ளார். ஆர் ஜே பாலாஜி நடித்த எல்கேஜி திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்தது. இப்படத்தில் ஹீரோவாக மட்டுமல்லாமல் கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியிருந்தார்.

அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் அவர் நடித்தது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இந்த படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் வீட்டில் விசேஷம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில் “தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குறைவான மதிப்பெண் பெற்றவர்களும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் மனம் தளர வேண்டாம். மேலும் 12 மதிப்பெண் ஒன்றும் வாழ்க்கையைத் தீர்மானிக்க வில்லை. அப்படி தீர்மானித்தால் பலருக்கு தற்போது வாழ்க்கையே இல்லை.

அதற்கு நான் ஒரு சிறந்த உதாரணம் நான். பன்னிரண்டாம் வகுப்பில் நான் தோல்வி அடைந்தேன். ஆனால் என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது.  எனவே தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு கணித தேர்வில் 200க்கு 40 மதிப்பெண் மட்டுமே எடுத்து பெயிலாகி விட்டேன். வாழ்க்கை முடிந்து விடவில்லை. மதிப்பெண் ஒன்றும் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க போவதில்லை” என்று மாணவர்களுக்கு தெம்பூட்டும் வகையில் அவர் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

Categories

Tech |