தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் உள்ள தடுப்பூசி முகாம்களில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக, தமிழகம் முழுவதும் 20,000 தடுப்பூசி முகாம்ககளில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7 மணி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இதை நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.
அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள தடுப்பூசி முகாம், பட்டாளம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதல்வர் அங்குள்ளவர்களிடம் உடல்நலம் எப்படி இருக்கிறது என்றும், அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார். இப்படி அடுத்தடுத்து முக்கியமான இடங்களில் முதல்வர் ஆய்வு செய்வது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. தடுப்பூசிக்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முதல்வரே நேரில் சென்று ஆய்வு செய்வது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.