விஜே மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் தோன்றி ரவீந்தர் பேசினார். அதோடு ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்தார். அவர் கேமராவுக்கு முன்னால் வருவதற்கு மகாலட்சுமி மறுக்கிறார் என்றார். என் பொண்டாட்டி ரொம்ப வெட்கப்படுகிறாள். கண்டிஷன் போட்டு என்னை நைட்டு 10 மணிக்கு அன்பே வா சீரியலை பார்க்க வச்சிட்டா. இந்த சீரியல்ல வர மகாலட்சுமியை பார்த்தா நானே கல்லால அடிங்கன்னு சொல்லுவேன்.
அதன்பின் ரசிகர் ஒருவர் ஒரு திருமணம் என்பது இவ்வளவு பரபரப்பாக நாட்டிற்கு தேவையா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரவிந்தர் இல்லை என்று கூறினார். அதன்பின் நான் கல்யாணம் முடிச்சுட்டு எப்ப பாத்தாலும் பேட்டி கொடுத்துட்டே இருக்கேன்னு சிலர் நினைக்கலாம். நான் ரெண்டே ரெண்டு பேட்டி மட்டும் தான் கொடுத்து இருக்கேன். எங்களுடைய திருமணத்தைப் பற்றி இப்படி பரபரப்பாக பேசுவாங்க எங்களுக்கு தெரியாது. என்னோட உடம்பு ரொம்ப பெருசா இருக்குன்னு உருவ கேலி செய்றாங்க. இதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். நான் குண்டாக இருப்பதை நினைத்து ஒருபோதும் வருத்தப்பட்டதே கிடையாது. எப்போதுமே ஒல்லியாக இருப்பவர்களுடன் என்னை நான் ஒப்பிட்டது கிடையாது. என்னைப் பொறுத்தவரை நான் குண்டாக இருப்பது எனக்கு சந்தோஷம்தான் என்றார்.