Categories
சினிமா

நானே வருவேன்….! “தனுஷ்க்கு ஹீரோயினாக நடிக்கும் எல்லி அவ்ரம்”…. அவங்க யாருனு தெரியுமா?….!!!!

தமிழ் திரையுலகில் தனுஷின் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து “நானே வருவேன்” என்ற படத்தை செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் படத்தின் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் இவருக்கு ஜோடியாக நடிகை எல்லி அவ்ரம் நடிக்கவிருப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. இவர் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. எல்லி அவ்ரம் நடிக்கும் தமிழில் இரண்டாவது படமாக இதுவாக அமைந்துள்ளது.

இந்த எல்லி அகரம் யாரென்றால் இவர் ஸ்வீடனை சேர்ந்தவர் என்பதும் அவரின் தாய் ஒரு நடிகை மற்றும் மிக்கி வைரஸ் என்னும் படத்தின் மூலம் பாலிவுட் வந்துள்ளார். பாலிவுட் படத்தில் நடித்த முதல் சுவீடன் நாட்டு நடிகையாக விளங்கி வருகிறார். மேலும் பட்டர்ஃப்ளை என்னும் கன்னட படத்திலும் நா இல்லு இந்தியா, நா பேரு சூர்யா என்ற தெலுங்கு படத்திலும்  நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து 70 நாட்கள் இருந்து வந்துள்ளார். டிவி நிகழ்ச்சியான  The Great Indian Laughter Challenge என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். நடிப்பை தவிர நடனம் ஆடுவதில் திறமை பெற்றவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |