நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை செல்வராகவன் இயக்க, வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த படத்தில் நடிகர் தனுஷ் கதிர், பிரபு என்ற இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இந்துஜா ரவிச்சந்திரன் புவனா என்ற கதாபாத்திரத்திலும், ஹியா சத்யா என்ற வேடத்தில் தனுஷின் மகளாகவும், குணா என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபும் நடித்துள்ளனர். இதில் பிரபு கதாபாத்திரம் மனைவி, மகளுடன் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இவரைப் பார்த்து சக ஊழியராக வேலை பார்க்கும் குணா பொறாமைப் படுகிறார். அதன் பிறகு அனைத்தும் மாற ஆரம்பிக்கிறது. ஒரு நாள் நள்ளிரவில் பிரபுவின் மகள் சத்யா யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த பிரபு மிகவும் அதிர்ச்சி அடைகிறார். சத்யா ஏதாவது ஒரு அமானுஷ்ய சக்தியுடன் பேசுகிறாரா என்ற சந்தேகம் பிரபுவுக்கு எழுகிறது. இதை வழக்கம் போல் திரில்லராக காட்டாமல் மிகவும் எதார்த்தமாக செல்வராகவன் காட்டியுள்ளார். ஆனால் யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் வேற லெவல். இதனையடுத்து சைக்கோ கொலையாளியான கதிர் வருகிறார். சிறுவயதில் கதிர் மனநலம் சரியில்லாதவர் என்பதால் கதிரை பெற்றோர்கள் தனியாக விட்டுவிட்டு பிரபுவை மட்டும் வளர்க்கின்றனர்.
கதிரின் மோசமான வளர்ப்பு, கடத்தல் காரர்களிடம் சிக்கிக் கொள்ளுதல் போன்றவைகள் தான் அவரின் மனநிலையை மாற்றுகிறது. இடைவேளைக்கு பிறகு சைக்கோ கொலையாளியின் கதை வரும்போது திரில்லாக இருக்கிறது. மேலும் கதிரின் மனைவியாக எல்லி அவ்ரம் மாதுரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் மாதுரி பேச முடியாத பெண்ணாக இருக்கிறார். அதன்பின் இரட்டை மகன்களின் பிளாஷ்பாக் சீன் வருகிறது. தனுஷ் அபாரமான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார். தனுஷின் யதார்த்தமான, மிரட்டலான நடிப்புக்காகவே படத்தை பார்க்கலாம்.