Categories
மாநில செய்திகள்

நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் …!!

வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் சுங்க சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் கட்டி வைத்திருப்பது கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாஸ்டேக் கட்டாயம் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கடல் 2017-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 1-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட m&n பிரிவில் நான்கு சக்கர வாகனங்களுக்கு வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து பாஸ்டேக் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள் 1,989-யில் படி நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் டீலர்களிடம் இருந்து புதிதாக நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்தபோதே பாஸ்டேக் அட்டை அழைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழை பெறும் போது கண்டிப்பாக பாஸ்டேக் வைத்திருக்க வேண்டும்.  பாஸ்டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே தகுதி சான்று தரப்படும் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதியிலிருந்து நேஷனல் பார்மண்ட் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கியுள்ளது.

காப்பீடு சட்ட திருத்தத்தின்படி வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பெறும் போது பாஸ்டேக் அட்டை வைத்திருக்க வேண்டும். காப்பீடு எடுக்கும்போது பாஸ்டேக் அடையாள எண்ணை அளிப்பது கட்டாயமாகும். இந்த நடைமுறை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |