Categories
உலக செய்திகள்

நான்கு மாதங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்டவர்…. சுடுகாட்டில் சுற்றித் திரிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி….!!

எகிப்தில் குடும்பத் தலைவர் ஒருவர் இறந்ததாக அவர் சடலத்தை உறவினர்கள் புதைத்த நிலையில் அவர் உயிருடன் திரும்ப வந்தது அனைவரையும் திகைக்க செய்துள்ளது. 

முகமது எல் கம்மல் என்பவருக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கிறார்கள்.
ஆசிரியராக பணியாற்றிய கம்மல் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பி வெளியில் போய் விடுவார். அதன்பின்னர் குடும்பத்தார் அவரை தேடி அலைந்து வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்து மாயமான கம்மலை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் கம்மலின் குடும்பத்தாருக்கு மருத்துவமனையில் பணிபுரியம்  ஊழியரான உறவினர் ஒருவர் போன் செய்துள்ளார்.அதில் பேசிய அவர் உறவினர், மருத்துவமனைக்கு அடையாளம் காண முடியாத ஒரு சடலம் வந்துள்ளது. அது கம்மலாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தார் அனைவரும் அங்கு சென்று பார்த்தபோது அது கம்மல் தான் என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனால் இரண்டு சகோதரிகள் மட்டும் உறுதியாக நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளனர். பின்னர் அந்த சடலத்தை கொண்டுபோய் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அடக்கம் செய்து உள்ளார்கள். இந்நிலையில் 4 மாதங்களுக்குப் பின் அங்குள்ள காஃபர் அல்-ஹோசர் என்ற கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் கம்மல் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து இளைஞர்கள் அவர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அறிந்த  குடும்பத்தார் அதிர்ச்சியில் திகைத்துப் போனார்கள். தற்போது கம்மல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு அவரை முறைப்படி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |