35 வயதான கார் பந்தய ஜாம்பவானும் ஜெர்மனியை சேர்ந்த வீரருமான செபாஸ்டின் வெட்டல் 2022 ஃபார்முலா 1 சீசன் முடிவடையும்போது கார் பந்தயங்களில் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் 2013 வரை ரெட் புல்லுக்காக ஒட்டிய செபாஸ்டியன் நான்கு முறை பார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதனால் இந்த அறிவிப்பு இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும். 2007 இல் அறிமுகமான வெட்டல் நான்கு முறை தொடர்ச்சியாக உலக சாம்பியன் பெற்றுள்ளார். இதில் முதல் சாம்பியன் பட்டம் ஃபார்முலா 1 இன் இளம் சாம்பியன் எனும் பெருமையை அவருக்கு பெற்று தந்துள்ளது. இத்தாலியின் ஃபெராரி டீமுடன் ஆறு சீசன்கள் ஆடி உள்ளார்.
இந்த நிலையில் அனைத்து கால சிறந்த கால்பந்தய வீரர்கள் பட்டியலில் கிராண்ட் ஃப்ரீ வெற்றுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றார். வெட்டில் 53 கிரான்ட் பிரீகளை வென்றிருக்கின்றார். லூயிஸ் ஹாமில்டன் மற்றும் மேதை ஷூமேக்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கின்றார். இந்த நிலையில் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டி இருப்பதால் இந்த வருடம் ஓய்வு பெற முடிவெடுத்திருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார். பார்முலா 1 சர்கிலில் ஆல் டைம் கிரேட் களில் ஒருவர் செபாஸ்டின் வெட்டல் இவரது பிரியாவிடை கிராண்ட் ஆக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.