Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நான்கு வழிசாலை அமைக்கும் திட்டம்…. விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்…!!

நெடுஞ்சாலைதுறையினரை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்45.ஏ. நான்கு வழிசாலை அமைக்கப்படுவதால் கொள்ளிடத்திலிருந்து பொறையாறு வரை உள்ள நிலம் மற்றும் வீடு ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலைப் பணிகளை செய்துவரும் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வலியுறுத்தியும், நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும், விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பலர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாய சங்கத்தினர் கஞ்சித் தொட்டி திறந்த காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |