பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் 4 வாரத்தில் உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இவர் பல விளம்பர படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து பிரபலமடைந்தவர். இதன்பின் பிக்பாஸில் கலந்துகொண்ட தர்ஷன் தனது குணத்தால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் தர்ஷனுக்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
https://www.instagram.com/p/CT4XUZmBpJV/
அதன்படி இவர் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவுடன் இணைந்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தர்ஷன் நான்கு வாரத்தில் தனது உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் .