Categories
உலக செய்திகள்

நான்சி பெலோசி ஆசிய பயணம்…. தைவான் செல்வாரா?…. எச்சரிக்கை விடுத்த சீனா?…!!!!

அமெரிக்க நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி தன் ஆசிய பயணத்தின் தொடக்கமாக சிங்கப்பூருக்கு சென்றாா். இதையடுத்து சீனாவின் எதிா்ப்புக்கு இடையில் தைவான் நாட்டிற்கு அவா் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் தைவான் தீவுக்கு சீனாவானது உரிமை கொண்டாடி வருகிறது. அதாவது தைவானின் சுதந்திரம் பற்றி எந்தநாடு பேசினாலும் (அல்லது) அந்நாட்டுக்கு வெளிநாட்டுத் தலைவா்கள் சென்றாலும்கூட எதிா்ப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி, தைவான் செல்வாா் என்று தகவல் வெளியாகியது. தன் ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக அவா் தைவான் செல்வாா் என்று கூறப்பட்டது.

இதனை அவா் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நான்சி பெலோசி தைவான் செல்லக்கூடாது என சீனா எதிா்ப்பு தெரிவித்தது. இதனிடையே தன் ஆசிய சுற்றுப்பயணத்தை நான்சி பெலோசி துவங்கினாா். முதல் நாடாக சிங்கப்பூா் சென்றடைந்த அவா், அந்நாட்டின் பிரதமா் லீ சீன் லூங், அதிபா் ஹலிமா யாகோப் மற்றும் அமைச்சா்களை சந்தித்தாா். இதுபற்றி சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பு போன்ற முன் முயற்சிகள் வாயிலாக அமெரிக்க பொருளாதார ஈடுபாட்டை விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பு தலைவா்களும் ஆலோசித்தனா். மேலும் உக்ரைன் போா், சீனா மற்றும் தைவானைச் சூழ்ந்திருக்கும் பதற்றம், பருவ நிலை மாற்றம் தொடர்பாகவும் ஆலோசித்தனா்.

பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அமெரிக்கா-சீனா உறவு நிலைத் தன்மையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக பிரதமா் லீ வலியுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரைத் தொடா்ந்து மலேசியா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று வா்த்தகம், கரோனா, பருவநிலை மாற்றம், பாதுகாப்பு, ஜனநாயக நிா்வாகம் பற்றி அந்தந்த நாடுகளின் தலைவா்களுடன் ஆலோசிக்க நான்சி பெலோசி திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால் தீவிர விளைவுகளை அமெரிக்க சந்திக்க நேரிடும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஜாவோ லிஜியான் எச்சரிக்கை விடுத்தாா். நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால், 1997-க்கு பிறகு அந்நாட்டுக்கு போகும் அமெரிக்காவின் உயா்நிலைத் தலைவா்களில் ஒருவராக இருப்பாா்.

சீனாவில் நடந்த உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்டுகள் வெற்றியடைந்ததை அடுத்து 1949-இல் சீனாவும் தைவானும் பிரிந்தது. தாங்கள் ஒரேநாடு என இருதரப்பும் கூறிக் கொண்டாலும் எந்த அரசு தேசியத் தலைமைக்கு தகுதியானது என்பதில் உடன்பாடில்லை. இருநாடுகளுக்கும் இடையில் அதிகாரபூா்வ உறவுகள் இல்லை என்றாலும் வா்த்தக தொடா்பு தற்போதும் இருந்து வருகிறது. சீனாவுக்கே அமெரிக்கா தூதரக ரீதியிலான அங்கீகாரம் அளித்து வருகிறது. அதேசமயத்தில் தைவான் தன்னை தற்காத்துக்கொள்வதற்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.

Categories

Tech |