விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா மந்தனா குறித்து பேசப்பட்டு வந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவர்கொண்டா அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கீதாகோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் இருவரும் மிகவும் பிரபலமானார்கள். ராஷ்மிகா மந்தனா தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகின்றார்.
As usual nonsense..
Don’t we just
❤️ da news!— Vijay Deverakonda (@TheDeverakonda) February 21, 2022
இந்நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்ற தகவல் பரவி வந்தது. இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றது. கடைசியாக இவர்கள் மும்பைக்கு டின்னருக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர். கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என பேசப்பட்டு வந்தது. இவ்வாறு பேசப்பட்டு வந்த நிலையில் விஜய் தேவர்கொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வழக்கம்போல் முட்டாள்தனம்” என குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இவர்கள் மீது பேசப்பட்டு வந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய் தேவரகொண்டா.