Categories
உலக செய்திகள்

“நான்தான் ஜெயிப்பேன்” ட்ரம்பின் நம்பிக்கை…. கைவிட்ட ஜார்ஜியா…. வெளியான முக்கிய தகவல்….!!

ஜார்ஜியாவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை மகாணத்தில் செயலாளர் Brad Raffensparger அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடியரசு கட்சி ஆதரவாளர்களை போன்றே தாமும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறும் இவர் இந்த மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், எண்கள் ஒருபோதும் பொய் சொல்லாது என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தேர்தல் முடிவுகள் ஒரு சில நேரம் ஒரு தரப்பினரை ஏமாற்றியதாக தெரியலாம்.

ஆனால் உண்மையில் எண்கள் எப்போதுமே வெற்றியை தான் முடிவு செய்கின்றன என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் சில மணி நேரத்துக்கு முன்னர் ஊடகம் ஒன்று பைடனுக்கு ஆதரவாகத் தான் ஜார்ஜியா மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே இந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடக்கவில்லை என்றால் தாங்கள் தான் வெற்றிபெற்று இருப்போம் என்றும், மேலும் மறு வாக்கு எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஜியார்ஜ் மாகாணத்தில் நடப்பது ஒரு வேடிக்கையான நிகழ்வு என்று ஜனாதிபதி ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜோ பைடன் ஜார்ஜியாவில் 1992ம் வருடத்திற்கு பிறகு முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதற்கு பிறகும் அதிபர் ட்ரம்ப் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |