பெண் ஒருவர் ஆன்லைனில் ஆடர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான்வெஜ் பீட்சா வழங்கிய பீட்சா நிறுவனத்தின் மீது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது .
உத்திரபிரதேசம மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த பெண் தீபாளி தியாகி. இந்தப் பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கானது பீசா நிறுவனம் ஒன்று ஆன்லைனில் ஆர்டர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான் வெஜ் பீட்சா டெலிவரி செய்ததால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். சைவ குடும்பத்தை சேர்ந்த எனக்கு நான் வெஜ் தாக்கியதால் அதை சாப்பிட்ட நான் இத்தனை நாள் கடைபிடித்து வந்த பாரம்பரியத்தை இந்த ஒரு நான் வெஜ் பீட்சா என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இது தெரியாமல் நான் சாப்பிட்டதால் பாவத்திற்கு ஆளாகியதாக கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு சாப்பிடுவதற்காக பீட்சா ஆர்டர் செய்தோம். அரை மணி நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்று கூறினர். ஆனால் பீட்சா டெலிவரி செய்தவர் அரை மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக டெலிவரி செய்தார். இருந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அந்த பீட்சாவை வாங்கி கொண்டு சாப்பிடும் போது தான் தெரியவந்தது அது நான்வெஜ் என்றேன். இதனால் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்தோம். இதன்பிறகு மார்ச் 26ஆம் தேதியன்று மாவட்ட வேளாளர் என கூறி தொடர்பு கொண்டு எங்களிடம் பேசியதில், தாங்கள் செய்த தவறுக்காக உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இலவசமாக பீட்சா வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக இந்தப் பெண் தங்கள் குடும்பத்தை இழிவுபடுத்திப் பேசுவதாகவும், தாங்கள் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கம், பாரம்பரியம் ஆகியவை அந்த ஒரே நாளில் வீணாகிவிட்டது . இதனால் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாவத்திற்கு ஆளாகி விட்டதால் இந்தப் பாவத்தை நாங்கள் போக்குவதற்காக எங்களுடைய முறையில் சில பூஜைகள் செய்ய லட்சக்கணக்கில் செலவாகும். இதன் காரணமாக அந்த நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் தவறான பீட்சாவை டெலிவரி செய்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது .