Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் அங்கு செல்கிறேன்” பாஜகவை வீழ்த்த…. மம்தா போடும் மாஸ்டர் பிளான்…!!!

கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். கோவாவில் சுயேச்சை எம்எல்ஏ பிரசாத் கோயங்காரும், மம்தாவுக்கு தன்னுடைய ஆதரவை அளித்துள்ளார். 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக தற்போது ஆட்சியை நடத்தி வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை விரைவில் மலர செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி கோவா மாநிலத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். முதல் முறையாக மம்தா பானர்ஜி கோவாவிற்கு செல்லும் பயணம் ஆகும். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த சில நாட்களில் கோவா செல்கிறேன். பாஜகவை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டியுள்ளது. எனவே அரசியல் கட்சிகள், அமைப்புகள், தனி நபர்கள் அனைவரும் என்னுடன் கை கோருங்கள். கடந்த பத்து வருடங்களாக கோவா மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே கோவாவை நாம் அனைவரும் கைகோர்த்து மீட்டு ஆட்சி அமைக்க வேண்டும். இந்த ஆட்சி கோவா மக்களுக்கு மிகவும் உண்மையாக நடந்து கொள்ளும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |