Categories
விளையாட்டு

நான் அடுத்த கபில்தேவன் போல இருக்க வேண்டும்…. சின்ன வயசில் இருந்தே ஆசை…. அஸ்வின் பேச்சு….!!!!!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதுள்ள அஸ்வின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது “28 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்தபோது நான் என் தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். மேலும் கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையினை தாண்டுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. ஏன்னென்றால் நான் 8 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது பேட்ஸ்மேனாக வேண்டும் என்றே விருப்பபட்டேன்.

கடந்த 1994 ஆம் வருடத்தில் பேட்டிங் தான் என் ஆசையாக இருந்தது. அந்த நேரம் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங்கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக திகழ்ந்தார். கபில்தேவ் பேட்டிங்கிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அடுத்த கபில்தேவாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக என் தந்தையின் அறிவுரையின் அடிப்படையில் சிறுவயதில் பேட்டிங் மட்டுமல்லாது மித வேகமாக பந்து வீசவும் பழகினேன். காலப் போக்கில் நான் ஆப்-ஸ்பின்னராக மாறிய பின், இந்திய அணிக்காக இத்தனை வருடங்கள் விளையாடி விட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் எனில் இந்திய அணியில் கால்பதிப்பேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த மகத்தான சாதனையை நான் பணிவன்போடு ஏற்றுக்கொள்கிறேன் என்று அஸ்வின் கூறினார்.

அண்மையில் மறைந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு புகழாரம் சூட்டிய அஸ்வின், “உலக கிரிக்கெட் அரங்கில் சுழற்பந்து வீச்சை முன்னெடுத்து சென்றவர் வார்னே ஆவார். கிரிக்கெட் உலகில் சுழற்பந்து வீச்சிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையை கொண்டு வந்தவர் ஆவார். மைக்கேட்டிங்குக்கு அவர்வீசிய பந்து தொடர்பாக அனைவருமே பேசி வருகிறார்கள். என்னை பொறுத்தவரையிலும் 2005 ஆம் ஆண்டில் ஆஷஸ் தொடரில் ஆன்ட்ரூ ஸ்டிராசுக்கு அவர் வீசிய பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தொடரில் கிட்டத்தட்ட தனிநபராக அணியை மீட்டெடுக்க போராடினார். ஆகவே பழகுவதற்கு இனிமையான ஜாலியான ஒரு மனிதர் தான் வார்னே” என்று கூறினார்.

Categories

Tech |