Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அதிக காதலை உணர்ந்த ஒரு சக நடிகர்” இவர்…. உருக்கமாக பதிவிட்ட துல்கர் சல்மான்…. ஆறுதல் தெரிவிக்கும் “நெட்டிசன்கள்”….!!

பிரபல மலையாள நடிகையான லலிதாவின் மரணம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல மலையாள நடிகையான லலிதா திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் 550 க்கும் மேலான படங்களில் தற்போது வரை நடித்துள்ளார். இதனையடுத்து 2 முறை துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற லலிதா உடல்நலக்குறைவால் 2 நாட்களுக்கு முன்பாக காலமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் மறைந்த லலிதா குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது நான் அதிக காதலை உணர்ந்த ஒரு சக நடிகர் லலிதா என்று தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் துல்கர் சல்மான் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி லலிதா தாயும் மகனுமாக எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும் ஒரு படத்தை நாம் பண்ண வேண்டும் என்று தன்னிடம் கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து படம் பண்ண எங்களுக்கு நேரம் இருக்கிறது என நினைத்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |