மனைவியை சுட்டு கொலை செய்துவிட்டு பிள்ளைகளிடம் தந்தை மன்னிப்பு கேட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்
அமெரிக்காவில் இருக்கும் ஹாஸ்டன் பகுதியை சேர்ந்த பாச்சல் என்பவர் தனது மனைவி ஷவன்னாவை சுட்டுக் கொலை செய்தார். அதன் பிறகு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற பாச்சல் தனது நிலை பற்றி தனது பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க காணொளி ஒன்றை பதிவு செய்தார். அதில் எனது மனைவி வெகு காலமாக எனக்கு துரோகம் செய்துவந்தார்.
பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை பல ஆண்களுடன் அவள் உரையாடுவது என்னிடம் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக இளைஞன் ஒருவனுடன் உல்லாசமாக இருக்க காத்திருப்பதாக அவர் கூறியதை கேட்டேன். எங்கள் இருவருக்கும் இடையே 18 வயது வித்தியாசம் உண்டு இதனால் இளம் வயதுடைய மனைவி எனக்கு துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே எனக்கு அச்சம் இருந்தது.
நான் எதற்காக இப்படி ஒரு செயலை செய்தேன் என்பதை எனது மகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த காணொளியை நான் வெளியிட்டுள்ளேன். எனது மகளை நான் மிகவும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.
பதிவு செய்த காணொளியை அவர் பகிர்ந்த சில மணி நேரத்தில் காவல்துறையினர் பாச்சலை சுற்றிவளைத்தனர். இதனைப் பார்த்த பாச்சல் துப்பாக்கியால் காவல்துறையினரை சுட பதிலுக்கு அவர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காயத்துடன் பாச்சல் கைது செய்யப்பட்டார்.