Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அதை செய்ததால் தற்போது அரசியலுக்கு வந்து விட்டேன்”….. பிரபல நடிகர் விஷால் திடீர் அதிரடி…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் ஆந்திர மாநிலம் உள்ள கடப்பாவில் அமீன் பீர் தர்காவுக்கு சென்று வழிபட்டார்‌. அதன் பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு கடப்பாவுக்கு வரும்போது எல்லாம் ஒரு புதுவிதமான சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியானது மசூதியில் வழிபட்ட பிறகு முழுமை அடைந்து போன்ற உணர்கின்றேன். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பாதயாத்திரையை மையமாக வைத்து படம் உருவாவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய கஷ்டங்கள் என்னவென்று படத்தை பார்ப்பதன் மூலம் மக்களுக்கு தெரியும்.

நான் அந்தப் படத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. என்னுடைய படம் லத்தி டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது. எல்லோருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். அனைவரும் எச்சரிக்கையாக பட்டாசு வெடிங்கள். ஆனால் பட்டாசுகள் வெடிக்காமல் ஏழைகளுக்கு உதவி செய்யலாம். மேலும் 100 ரூபாய் கொடுத்து யார் உதவி செய்தாலும் அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே கருதப்படுவார்கள். மேலும் அந்த வகையில் நான் அரசியலுக்கு தற்போது வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |