அண்மை நாட்களாக இசை அமைப்பாளர் அனிருத் திருமணம் பற்றி பலவேறு வதந்திகள் பரவி வருகிறது. அத்துடன் அவர் பிரபல நடிகையை காதலிக்கிறார் எனவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது எனவும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. எனினும் இருதரப்பிலும் அதனை மறுத்துவிட்டனர்.
தற்போது பிரபல பாடகியான ஜோனிடாகாந்தியிடம் கேட்கப்பட்டபோது அவர் அனிருத்தை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக பதில் அளித்திருக்கிறார். அதாவது அவரிடம் சூர்யா, ரண்பீர் சிங், அனிருத் இந்த 3 பேரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதில்கூறிய அவர் சூர்யா, ரண்பீர் சிங் இருவரும் திருமணம் ஆனவர்கள். இதனால் நான் அனிருத்தை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று ஜாலியாக பதில் அளித்திருக்கிறார்.