Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அனுமதி கொடுக்கல…! சட்டப்படி செல்லாது … பாயிண்ட் பிடித்த ஓபிஎஸ்… நள்ளிரவு தூக்கத்தை தொலைத்த அதிமுகவினர் ….!!

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். ஓ.பன்னேர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க தற்போதைய சூழலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிமுகவின் தலைமை கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. எப்போதும் அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தவேண்டும், ஆலோசனை செய்யவேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் பெயரில் தான் அறிக்கை வரும். ஆனால் நேற்று கழக தலைமை நிலைய செயலாளர் – தலைமை கழகம் என அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் இன்று ( 27.06.22) திங்கள்கிழமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 27.06.2022 – திங்கள்கிழமை காலை 10மணிக்கு தலைமையகம் – புரட்சி தலைவர் எம்ஜியிஆர் மாளிகை கூட்ட அரங்கில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னற்றக்கழகத்தின் சட்ட, திட்ட விதி 20A(v)-ன் கீழ் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது.  அதன்படி, இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கொட்ட வேண்டும். ஆனால் இவருடைய ஒப்புதலின்றி,  கையொப்பம் இல்லாமல் தலைமை கழக நிலையச் செயலாளர்,  தலைமை கழகம் என்ற பெயரில் கழக சட்டதிட்ட விதிகளுக்கு எதிராக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த அறிவிப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 27.06.2002 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தலைமை கழகமான  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை கூட்டரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும்,  அந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எவ்விதமான ஒப்புதலையும்,  மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் விதியை மீறி கூட்டப்பட்டுள்ள  மேற்படி கூட்டம் கழகம் மற்றும் விதிகளுக்கு புறம்பானது ஆகும். சட்டங்களுக்கு புறம்பாக கூட்டப்பட்ட மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணைச் ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத் தொண்டர்களும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Categories

Tech |