Categories
உலக செய்திகள்

“நான் அனைவரையும் முத்தமிடுவேன்” முகக்கவசத்தை வீசியெறிந்த ட்ரம்ப்….!!

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட அதிபர் பிரச்சாரத்தில் ஆதரவாளர்களை முத்தமிட தயார் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன்பிறகு தொற்றில் இருந்து அதிபர் விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சார பேரணியில் சமூக இடைவெளியின்றி பலரும் பங்கேற்றனர்.

அந்தப் பேரணியில் அதிபர் பேசிய போது, “நான் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டேன். நோய் எதிர்ப்பு சக்தி என்னிடம் அதிகம் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இப்போது பலம் வாய்ந்தவனாக உணர்கிறேன். இங்கு இருக்கும் அனைவரையும் நான் முத்தமிட தயார்.

அழகான பெண்களையும் ஆண்களையும் நான் முத்தமிடுவேன் என்று கூறிய அதிபர் தனது முக கவசத்தை ஆதரவாளர்கள் மத்தியில் தூக்கி வீசினார். தொற்று பரவும் சூழலில் ட்ரம்ப் அலட்சியமாக நடந்து கொள்வது விமர்சனங்களை எழ  செய்துள்ளது. இதுவரை தொற்றிற்கு 2 லட்சத்து 20 ஆயிரத்து 11 பேர் அமெரிக்காவில்  பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |