Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் அப்படித்தான் செய்வேன்” கேமராவை சேதப்படுத்திய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனுப்பூர் கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு ஆசைத்தம்பி  கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  ஆசைத்தம்பி கேமராவில் பதிவாகும் சேமிப்பு கருவியை ஆய்வு செய்தார்.

அதில் கேமராவை சேதப்படுத்தியது அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆசைத்தம்பி திருமூர்த்தியிடம் கேட்டபோது அவர் தான் அப்படி தான் செய்வேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆசைத்தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமூர்த்தியை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |