கோவையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரைக்கும் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்திருந்தாலும், இந்த கோவை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் நான் நினைத்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. அதை எல்லாம் இங்கே விரிவாக பேசி, இதை அரசியல் ஆக்குவதற்கு நான் தயாராக இல்லை. காரணம் இது அரசு விழா.
வெற்றி வாய்ப்பை தவற விட்ட இந்த மாவட்டமாக கோவை இருந்தாலும், கோவையில் தான் இத்தகைய மாபெரும் மாநாடு போன்ற மக்கள் சந்திக்கக்கூடிய நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன் என்பதுதான் முக்கியம். ஆட்சிக்கு வந்தவுடனே நான் சொன்னேன். என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை லயோலா கல்லூரிக்கு சென்று, ஒட்டு எண்ணக்கூடிய இடத்தில் நேரடியாக சென்று அதை வாங்கி விட்டு….
நான் நேராக போன முதலிடம் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடிய அவருடைய நினைவிடத்துக்கு தான் போனேன். அங்கே மரியாதையை செஞ்சிட்டு, வணக்கம் செலுத்திட்டு வெளியே வரும்போது…. பத்திரிகையாளர்கள் என்னை சூழ்ந்துகொண்டு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் செய்தி என்ன என்று என்னிடத்தில் கேட்டார்கள்…. அப்ப நான் சொன்னேன்….
வெற்றி தந்த மக்களுக்கு என்னுடைய நன்றி. நாங்க வெற்றி பெற வேண்டும் என ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் எங்களை எதிர்த்து ஓட்டு போட்டு இருக்கிறவங்க, எங்களுக்கு ஓட்டு போட தவறியப்பவர்கள் ஆக ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் நாங்கள் பணியாற்ற மாட்டோம், ஒட்டு போடாதவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவது தான் என்னுடைய லட்சியம் என்று நான் உறுதியாக சொன்னேன்.
எந்த வேறுபாடும் நாங்கள் பார்க்க மாட்டோம் என்று சொன்னது தான்… இன்று வரையில் அல்ல… தொடர்ந்து அப்படிதான் கடைபிடிப்பேன். நம்முடைய ஆட்சி இருக்கிற வரையில் அப்படியேதான் கடைபிடிப்பேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது என உறுதி அளித்தார்.