Categories
உலக செய்திகள்

“நான் அமெரிக்க அதிபர்” என்னிடம் அப்படி பேசக்கூடாது…. கோபமடைந்த ட்ரம்ப்….!!

அதிபர் ட்ரம்ப் நான் அமெரிக்க ஜனாதிபதி என்னிடம் ஒருபோதும் அப்படி பேசக் கூடாது என்று கோபமாக கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் தோல்வியை சந்தித்துள்ள ட்ரம்ப் பைடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகின்றார். இந்நிலையில் ராய்ட்டர்ஸ் வெள்ளை மாளிகையின் நிருபர் ஜெஃப் மேசன், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு எதிரான தனது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்புகிறீர்களா என்று டிரம்பை பலமுறை கேட்டார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப் “என்னிடம் எப்போதும் அப்படி பேச வேண்டாம்” என்று கோபமாக கூறினார்.
தனது நான்கு ஆண்டு அதிபர் காலத்தில் நடந்த பல சம்பவங்களைப் போலவே, இந்த முறையும், டிரம்ப் ‘கடினமான’ கேள்விகளைக் கேட்கும் ஒரு நிருபரை புறக்கணிக்க முடிவு செய்து, நான் அமெரிக்காவின் ஜனாதிபதி. எனவே அதிபருடன் ஒருபோதும் அப்படி பேச வேண்டாம் என கோபமாக கூறினார்.

Categories

Tech |