Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் அரபிக் குத்து பாடலை எழுதல”… கூறிய எஸ்கே… அதிர்ச்சியடைந்த ஃபேன்ஸ்…!!!!

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலை நான் எழுதவில்லை என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளைக் கொண்டிருக்கின்றார். சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருக்கும் அரபிக் குத்து பாடலை எழுதியிருக்கின்றார். பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்த பாடலை நான் முழுவதுமாக எழுதவில்லை என கூறியுள்ளார். எனக்கு அனிருத் அரபிக் மொழியில் பாடி அனுப்பியதாகவும் அந்த பாடலில் இருந்த அரபிக் வரிகளை நீக்கி விட்டு தமிழ் வார்த்தைகளை தான் சேர்த்ததாகவும் கூறியிருக்கின்றார். இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |