Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அலறவும் இல்ல..!! அழுகவும் இல்ல..! புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான்…!!!!

புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முரசொலியில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த  தமிழிசை சௌந்தரராஜன், நான் என்றும் அவமதிக்கப்படவில்லை. எதைப் பார்த்தும் அலறவும் மாட்டேன். புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான்  நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் நம்ம தமிழ்நாட்டில் இருந்தே அதை எப்படி மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்கு சொல்ல தெரியவில்லை. அத்தகைய மனநிலை சரியான மனநிலை அல்ல. ஆனால் அப்படி மன நிலையில் இருப்பவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஏதோ நான் அவமதிக்கப்பட்டேன் நான் அலறினேன் அப்படி என்று எதுவும் கிடையாது.

இது ஒரு கலாச்சாரம். ஒரு இனத்தின் உறவினர்களோ வேண்டியவர்களோ வந்தால் அது வரவேற்கக் கூடிய கலாச்சாரம் பாரத தேசத்தின் கலாச்சாரம். தமிழகத்தின் கலாச்சாரம். தெலுங்கானாவின் கலாச்சாரம். அந்த கலாச்சாரம் பின்பற்றப்படவில்லை என்பது பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது தான் எனது பேட்டி. “நான் அதை பற்றி கவலைப்படவில்லை எங்கும் அவமதிக்கப்படவும் இல்லை. ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்து மகிழும் கூட்டம் உள்ளது. இன்னொரு மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரி மதிக்கப்படவில்லை என இங்கு உள்ளவர்களின் மனநிலை இருந்தால் அதற்கு ஒன்றும் சொல்ல முடியாது” என்றார்.

Categories

Tech |