ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் 35 பெண்களை ஏமாற்றி குடும்ப வாழ்க்கை வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் Kansai மாகாணத்தை சேர்ந்த Takashi Miyagawa(39) என்பவர் 35 பெண்களை ஏமாற்றி குடும்ப வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தற்போது இவரின் பித்தலாட்டத்தை கண்டறிந்த பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்தப் பெண்களிடம் தன்னுடைய பிறந்தநாளை வெவ்வேறு தினங்களாக கூறி ஏமாற்றி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
Miyagwa என்ற பெண்ணிடம் தனது பிறந்தநாளை பிப்ரவரி 22 என்றும் 40 வயதுடைய மற்றொரு பெண்ணிடம் என்னுடைய பிறந்தநாள் ஜூலை மாதம் எனவும் கூறி 35 பெண்களுடன் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டு ஏமாற்றியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து 665 டாலர் மதிப்புள்ள நகைகள் ஆகியவற்றை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரால் இன்னும் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் மேற்கண்ட விசாரணை நடைபெற்று வருகிறது.