Categories
உலக செய்திகள்

நான் அவரை சந்திக்க வேண்டும்… இந்தியாவிடம் சீன மந்திரி கோரிக்கை…!!!

இந்திய பாதுகாப்பு துறை மந்திரியை சந்திக்க சீன பாதுகாப்பு துறை மந்திரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அந்தக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை நேரில் சந்திக்கவேண்டும் என சீன பாதுகாப்புத்துறை மந்திரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்தியாவிடம் சீனா விடுத்துள்ள இந்த கோரிக்கையில் இரு நாட்டு பாதுகாப்பு துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த கோரிக்கைக்கு இந்தியா தற்போது வரை எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் மோதல் போக்குக்கு மத்தியில், இந்திய பாதுகாப்புத் துறை மந்திரியை சந்திக்க சீன பாதுகாப்புத்துறை மந்திரி அனுமதி கோரி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Categories

Tech |