Categories
சினிமா

நான் அவர் கிட்ட அப்படி சொன்ன…. விஜய்தான் நடிக்க சொன்னார்…. நடிகர் அருண் விஜய் உருக்கம்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன்தான். ஆரம்பத்தில் இவரின் படங்கள் ஹிட் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த இவரின் நடிப்பில் வெளியான பல படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.பின்னர் இவரின் திரைப்படங்கள் ஹிட் ஆகாத காரணத்தால் நடிப்பில் இருந்து ஒதுங்கி தயாரிப்பு பணிகளில் ஈடுபட அவரின் குடும்பம் வலியுறுத்தியது.

இதனால் தயாரிப்பு பணிகளில் ஈடுபட முடிவு செய்து அருண் விஜய் நடிகர் விஜய்யை பார்த்துள்ளார். அப்போது விஜய் ஊக்கப்படுத்தியதன் காரணமாக மீண்டும் நடிப்பிற்கு வந்ததாக அருண் விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது நடிகர் அருண் விஜய் தான் மார்க்கெட் இல்லாத நேரத்தில் பட தயாரிப்பு செய்யலாம் என்று நடிகர் விஜய் இடம் கால்ஷூட் கேட்டிருக்கிறார். ஆனால் விஜய், என்னை விட நல்லா சண்டைக் காட்சிகள் பண்றவரு நீங்க, எதுக்கு நடிப்பை விட்டு விட்டு தயாரிப்பு பக்கம் வரீங்க? எல்லாம் நேரம்தான், சரியாயிடும். நடிப்பை விட்டுடாதீங்க என்று சொல்லி இருக்கிறார்.

Categories

Tech |