Categories
உலக செய்திகள்

நான் இதற்காகத்தான் டுவிட்டரை வாங்கினேன்…. எலான் மஸ்க் தகவல்….!!!!

எலான் மஸ்க்   டுவிட்டரை வாங்கியுள்ளார்.

உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் டுவிட்டரை  வாங்கப் போவதாக அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க  ஒப்பந்தம் செய்தார். ஆனால் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் வழங்க மறுப்பதாக கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதனால் எலான்  மஸ்க்  மீது டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் தலைமையகத்துக்குள்  எலான் மஸ்க் நேற்று முன்தினம் நுழைந்தார். அப்போது அவர் கை கழுவ பயன்படுத்தப்படும் சிங்க் ஒன்றை  கையில் எடுத்து சென்றார். இதுகுறித்து வீடியோவையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதன் பின்னர் தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் மூலம் டுவிட்டரை  வாங்கும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சில மணி நேரத்துக்குள்ளாக நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4  பேரை எலான்  மஸ்க்  அதிரடியாக பணி நீக்கம் செய்தார். உண்மையில் அதற்கு முன்னதாக டெஸ்லா  உரிமையாளர் டுவிட்டர்  விளம்பரதாரர்களுக்கு  எழுதிய கடிதத்தில் சமூக ஊடகங்கள் தவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி எதிரொலியாக பிளவு படும் பெரும் ஆபத்தின் மத்தியில் மனித குலத்திற்கு உதவும் முயற்சியில் டுவிட்டரை வாங்கியதாக கூறினார். அப்போது டுவிட்டர் உரிமையாளராக அவர் எடுத்த முதல் முடிவுகள் தலைமை செயல் அதிகாரி 4 பேரை நீக்கியதாகும்.

மேலும் சட்ட வல்லுநர்கள் நிதி பொறுப்புகள் குறிப்பாக பணியாளர்  இழப்பீடு  மற்றும் வணிகத்திற்கான பணப்புழக்கத்தை பராமரிப்பது குறித்த கவலை. இந்நிலையில் தோராயமாக 7,500 பணியாளர்களுக்கு நிறுவனத்தின் இழப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். மேலும்  3  பணி நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கொடுக்க வேண்டும். இந்நிலையில் ஒரு வருடம் கழித்து எலான்  மஸ்க் இவர்களை  பணி நீக்கம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனாலும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள தவறு மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணத்தை பெறுவார்களா என்ற தெளிவின்மை நீண்ட வழக்குகளை தொடர தூண்டலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |