Categories
சினிமா

“நான் இத நெனச்சு கூட பாக்கல”…. ரசிகர்கள் முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுத விஜே பிரியங்கா…. வைரலாகும் வீடியோ…!!!!

விஜய் டிவியில் தொகுப்பாளினி பணியை பல வருடங்களாக செய்து வருபவர் தான் விஜே பிரியங்கா. இவர் முதன்முதலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். தன்னுடைய மைனஸ் விஷயங்களை வைத்து காமெடியாகவும் ரசிக்கும் படியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது.

அவ்வகையில் தற்போது பிரியங்கா சமீபத்தில் மலேசியா சென்றுள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றது முதல் மலேசிய ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் கண்ணீர் விட்டு நெகிழ்ச்சி அடைந்தது வரை அனைத்தையும் வீடியோவாக அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.

Categories

Tech |