நெல்லையில் தேசிய அளவிலான புலனாய்வுத்துறையின் அதிகாரி போல் நடித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மெல்வின் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அவரை தேசிய அளவிலான புலனாய்வு பிரிவின் அலுவலகத்தில் கைரேகைகளின் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் அவ்வேளை தொடர்பான ஸ்டிக்கரையும் ஒட்டிவைத்துள்ளார்.
இதற்கிடையே அவர் முருகன்குறிச்சியில் தன்னை தேசிய அளவிலான புலனாய்வுப் பிரிவின் அதிகாரி என்று காவல்துறையினரிடமும், பொதுமக்களிடமும் கூறியுள்ளார். இதில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்ததில் உண்மை வெளியானது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.