Categories
தேசிய செய்திகள்

“நான் இன்னும் சாகல” உயிரோட தான் இருக்கேன்…. பாடையில் ஊர்வலமாக சென்று மனு கொடுத்த முதியவர்…. வீடியோ வைரல்….!!!!

ஹரியானா மாநிலத்தில் துலி சந்த் (102) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம் தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென கடந்த மார்ச் மாதத்தோடு முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது முதியவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்ததால் அதிகாரிகள் பென்சனை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சரியான ஆவணங்களை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளார். இருப்பினும் ஏப்ரல் மாதம் கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகை கிடைக்க வில்லை. இதன் காரணமாக முதியவர் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மாநில தலைவர் நவீன் ஜெய்ஹிந்த், முன்னாள் அமைச்சர் உட்பட நிர்வாகிகளுடன் அரசு அலுவலகத்திற்கு பாடையில் ஊர்வலமாக சென்று மனு வழங்கினார்.

அப்போது முதியவர் தான் இன்னும் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் என்ற பாதகையை கையில் ஏந்தியபடி சவ அலங்காரம் செய்யப்பட்ட வண்டியில் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரேஷன் கார்டில் இருந்து முதியவரின் பெயர் நீக்கப்பட்டதால் தான் முதியவர் இறந்து விட்டதாக கருதி பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவரைப் போன்று 170 முதியவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வந்துள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் முதியவரின் ஓய்வூதியத்தை 24 மணி நேரத்திற்குள் வழங்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என ஆளும் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கூறியுள்ளார்.

Categories

Tech |