நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என்று பிடிஆர் சொல்வதற்கு என்ன உரிமை உள்ளது. நீங்கள் தான் சாபக்கேடு. சுதந்திரத்திற்கு முன்னதாக கிழக்கிந்திய கம்பெனிகளோடு நீங்கள் கொஞ்சி குலாவவில்லையா? ஜஸ்டிஸ் கட்சிக்கு தொடர்பில்லையா? 1941ல் நீங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டும் வழங்கினால் இந்தியாவில் இருந்து ஆட்சி செய்யுங்கள் என்று கூறினார்கள். அந்த கட்சியினுடைய வழித்தோன்றலாக நீங்கள் வந்து அமர்ந்து விட்டு என்னை பார்த்து அந்த வார்த்தை நீங்கள் கூறக்கூடாது.
அப்படி கூற உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. திமுகவில் யாருக்கும் அந்த அருகதை கிடையாது. உங்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கு கம்பெனிக்கும் உள்ள தொடர்பு மக்களுக்கு தெரியும். நான் விவசாயத் தோட்டத்தில் சென்று விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வேன். ஆனால் உங்களால் முடியுமா? தகாத வார்த்தைகளால் பேசுவீர்கள். ஆபாசம் காட்டுவீர்கள். விங்கு வைத்து பேசுவீர்கள். நான் இயேசு கிடையாது ஒரு கணத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட. நான் இயேசு கிடையாது அடித்தால் திருப்பி அடிப்பேன். அத்துமீறினால் அதனை இருமடங்காக செய்வேன். இதனால் எதை இழந்தாலும் எனக்கு கவலை கிடையாது என்று கூறினார்.