Categories
சினிமா

“நான் இறக்கவே இல்லை, உயிரோடு தான் இருக்கிறேன்”…. பிரபல நடிகை கொடுத்த ஷாக்….!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீணா கபூர் என்ற இந்தி நடிகை அவரின் மகன் சச்சின் கபூரால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. உயிரிழந்த நடிகையின் உடல் மும்பையில் இருந்து 80 கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு காட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த நடிகை தான் உயிருடன் இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தன்னை பற்றி உறுதி செய்யப்படாத வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை எனவும் தன் மகனுடன் மும்பையில் உள்ள வீட்டில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வதந்தியை படித்து விட்டு பலரும் போன் செய்து விசாரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |