Categories
தேசிய செய்திகள்

நான் இறந்துவிட்டால்….! விஷம் கலந்த உணவை குழந்தைகளுக்கு கொடுத்து….. தானும் இறந்து போன தாய்…. சோகம்…!!!!

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஹொசபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ரூபா(வயது 30). விவசாயியான லோகேஷ், மாகடி தாலுகாவின் விவசாய சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஹர்ஷிதா(6), ஸ்பூர்தி(4) என 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் ரூபாவுக்கும், லோகேசுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து லோகேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த ரூபா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்துவிட்டால் தனது குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்று கருதிய அவர் குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்தார். அதன்படி உணவில் பூச்சிக்கொல்லி மருந்து(விஷம்) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, பின்னர் தானும் அந்த உணவை சாப்பிட்டுவிட்டார். இதில் விஷம் தலைக்கேறிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 3 பேரும் வீட்டிலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |