“நான் ஈ” படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப் கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“நான் ஈ” படத்தில் வில்லனாக நடித்துள்ள கன்னட முன்னணி நடிகரான சுதீப் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள ஷிவ்மோகாவில் அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பள்ளிகள் சுமார் 133 ஆண்டுகள் பழமையானது என்பதால் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மேலும் இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மாணவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதை அறிந்த சுதீப் அந்த பள்ளிக்கு தேவையான வசதியை செய்து கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய இந்த பெருந்தன்மையான செயலுக்காக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.