மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி திடீரென தீக்குளித்து தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மூத்த மகனான இரட்சகா தாஸ் என்பவர் இராணுவ வீரராக இருந்துள்ளார். இந்நிலையில் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து ரோஸ்மேரி அடிக்கடி தனது மகன்கள் மற்றும் மகளிடம் “நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை” என கூறி வந்துள்ளார். இதனையடுத்து தனியாக இருந்த மூதாட்டி ரோஸ்மேரி திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.