Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உங்களுக்கு வேலை வாங்கி தாரேன்…. மர்ம நபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

பெண்ணிடம் பண  மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓரு  கல்லூரியில் சரிதா தல்லூரு என்ற மாணவி படித்து வருகிறார். இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் பகுதிநேரமாக வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை  தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால்  அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி உடனடியாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |