நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக மும்மதத்தை சேர்ந்த 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர், கர்ப்பிணி தாய்மார்களிடம் நான் உங்கள் சகோதரனாக வந்துள்ளேன் என்று கூறினார்.
500 பெண்களுக்கும் தனித்தனியாக வளையல்கள் அணிவிக்க செய்து சந்தனம் பூச செய்தார்.அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சீர்வரிசை பொருள்களையும் வழங்கி மலர் தூவி ஆசீர்வதித்தார். தொடர்ந்து ஐந்து வகை உணவுகளும் பரிமாறப்பட்டது. இதனைக் கண்ட பெரும்பாலான கர்ப்பிணி தாய்மார்களின் கண்கள் கலங்கியது.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,வழக்கமாக மேடை நிகழ்ச்சிக்காக நடத்தப்படும் இது போன்ற வளைகாப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரமுகர்கள் மைக்கில் வாழ்த்தி விட்டு சென்று விடுவார்கள். ஆனால் சம்பிரதாய முறைப்படி எங்களின் சகோதரனாக கலெக்டரை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வளைகாப்பு நடத்தி சீர்வரிசை வழங்கி பாசத்துடன் உணவு பரி மாறியதை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. கலெக்டர் வழங்கிய சீர்வரிசையை எங்கள் தாய் வீட்டு சீதனமாக நாங்கள் கருதுகிறோம் என கண்ணீர் மல்க அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.