Categories
தேசிய செய்திகள்

நான் உங்கள் மகனுக்கு டியூஷன் எடுக்கிறேன்…. மாணவனை அழைத்து சென்று தோஷத்தை தீர்த்த டீச்சர்…. விசாரணையில் வெளிவந்த அதிரடி திருப்பம்….!!!!

சிறுவனை பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஸ்தி பாவா கேல் பகுதிகள் 13 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி சிறுவனை  மங்லிக்   ஆசிரியை தனது  வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின் தனக்கு திருமண தோஷம் இருப்பதால்  சிறுவனை திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சள்-மருதாணி  வைப்பது முதல் தேனிலவு  வரை நடத்தியுள்ளார். இந்த நிலையில் 6 நாட்கள் கழித்து அவரை விதவை உடை அணிந்து தனது கைகளில்  இருந்த வளையல்களை உடைத்துள்ளார். மேலும் தாலியையும் அகற்றியுள்ளார். பின்  கணவர் இறந்து விட்டதாக உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் அந்த சிறுவனை மங்லிக்  அவரது வீட்டிற்கு  அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற சிறுவன் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம்  நடத்தி விசாரணையில் அவர் தன்னை மாணவன் பிணைக்கைதியாக 6 நாட்கள் பிடித்து வைத்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார் என கூறியுள்ளார். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |