Categories
தேசிய செய்திகள்

நான் உட்காரணும்… காலை எடுங்க… மறுத்த இளைஞனுக்கு சிறுவன் வைத்த ஆப்பு..!!

பூங்காவில் இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜனக்பூர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று 23 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும் தனக்கு எதிரே உள்ள இருக்கையில் இரு கால்களையும் நீட்டி வைத்துள்ளார். அங்கே வந்த ஒரு சிறுவன் தான் இருக்கையில் அமர வேண்டும் என்றும், அதனால் காலை எடுக்கும் படியும் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சிறுவன் மற்றும் இளைஞனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அந்த இளைஞனை சுட்டு உள்ளான். இதில் 23 வயது இளைஞன் படுகாயம் அடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |