பெண்ணை ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஆடு மேய்க்க வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து சங்கர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்கரை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.