ஈரோடு மாவட்டத்தில் தன்னை காதலிக்க பெண் ஒருவர் மறுப்பு கூறியதால் வாழப் பிடிக்காமல் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தோரமங்கலம் காப்பரத்தான் பட்டியில் ராஜராஜன் என்பவர் வசித்து வருகிறார். விசைத்தறி உரிமையாளரான அவருக்கு 25 வயதில் கோவிந்தன் என்ற மகன் உள்ளார். அவர் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சேலத்தில் இருக்கு என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் பள்ளிபாளையத்தில் தங்கி லோகநாதன் என்பவர் புதிதாக கட்டி வருகின்ற பெட்ரோல் விற்பனை நிலையத்தின் கட்டிடப் பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தன் பூச்சி மருந்தை குடித்து விட்டு வாந்தி மயக்கத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த கோவிந்தன் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். ஆனால் கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீசில் மணிகண்டன் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கோவிந்தன் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அவிநாசியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தன்னுடன் வேலை செய்து வந்த திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்தப் பெண் தற்போது காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் மனமுடைந்த கோவிந்தன் வாழப்பிடிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.