Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி…. போக்சாவில் சிக்கிய 17 வயது சிறுவன்….!!!!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நமது நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும் கூட இன்று வரை பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும், வரதட்சணை கொடுமைகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதற்காக நமது அரசு எவ்வளவுதான் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்நிலையில்    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் கிராமத்தில் 17 வயதான   சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் ஒரு  மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தற்போது அந்த சிறுமி  3  மாதம் கர்ப்பமாக உள்ளார் . இதனால்  மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை மீட்டு   சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு  சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |