உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் பகுதியை சேர்ந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவருடன் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்ப வந்து கொண்டிருந்தபோது கணவரை காணவில்லை என்றும், தான் தனியாக நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற 2 பேர் தன்னை வீட்டில் விட்டு விடுவதாக கூறி அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி இருந்தார்.
இது குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.