Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் உன்னை LOVE பண்ணல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாரண்டப்பள்ளி பகுதியில் பொக்லைன் ஆப்பரேட்டரான சத்யகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் சத்யகுமாரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யகுமார் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சத்யகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்யகுமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |