பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கோட்டைவாசல் மேல வீதியில் இருசக்கர வாகன மெக்கானிக்கான விக்னேஸ்வரன் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த மாணவி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விக்னேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.