இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த அடகுக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் சுப்ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு பகுதியில் சொந்தமாக நகை அடகுக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் சுப்ரமணி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் மறுப்பு தெரிவித்தால் நகைகளை திருடி சென்று விட்டாய் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து அந்த பெண் கடந்த வாரம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்து அந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுப்ரமணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.